- Advertisement -
இந்தியா நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆனால், தற்போது ஜப்பான் அரசு (JAXA) வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:04 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது என அறிவித்திருந்தது. இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி, ” LUNAR-A” சந்திரனின் உட்புறத்தை நேரடியாக ஆய்வு செய்யும் எனவும், இது சந்திரனின் தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றிய பல தரவுகளை வழங்கும்” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது ‘SLIM’ என்ற விண்கலத்தை வரும் 26ம் தேதி அனுப்ப உள்ளதாக JAXA அறிவித்திருந்தது. ஆனால், இங்கு ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக இந்த திட்டம் ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 28ம் தேதி காலை 9.26 மணிக்கு ‘SLIM’ விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று ஜப்பான் அறிவித்துள்ளது.
- Advertisement -