- Advertisement -
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் அமைந்திருக்கும் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் ரூ. 100 கோடிக்கான காசோலையைக் காணிக்கையாக போட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இந்த காசோலையிலிருந்த விவரங்களைச் சேகரித்து,அந்த பக்தரின் சேமிப்பு கணக்கு விவரத்தை விசாரித்தபோது அவரது கணக்கில் வெறும் ரூ . 17 மட்டுமே இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வங்கியிடம் இருந்து அந்த பக்தரின் முழு விவரங்கள் பெறக் கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது
- Advertisement -