- Advertisement -
அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா அதிபரானார். இதற்குப் பின்னர், இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜார்ஜியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
தற்போது, இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் டிரம்ப் நேற்று (ஆக. 24) இரவு அட்லாண்டா ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைந்தார். இதனால் அங்கு சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பாகக் காணப்பட்டது. ஆனால், இதைத் தொடர்ந்து, 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாகச் செலுத்திய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் எனத் தகவல் வெளியானது
- Advertisement -