- Advertisement -
இந்திய அரசு சார்பில் 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 2021ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், இதில் கடைசி விவசாயி’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றதை அடுத்து, இயக்குநர் ம.மணிகண்டன் நெகிழ்ச்சி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் “ இந்த கடைசி விவசாயி படத்தில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, கதாபாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டிக்கும், ஒத்துழைப்பைத் தந்த ஊர்மக்களுக்கும், சிறப்பாக நடித்த விஜய் சேதுபதிக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றி” என நெகிழ்ச்சியாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -