- Advertisement -
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் பண்டிகை தினங்கள், வார இறுதி நாட்களில் அரசின் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களுக்காக இன்று (ஆக.25) முதல் வரும் ஆக .28ம் தேதி வரை 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்புப் பேருந்து சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, நாமக்கல், பெங்களூருவுக்குச் செல்லும் வகையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -