- Advertisement -
நாம் நம் வீட்டில் பூஜை அறையில் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின் போட்டோ மற்றும் சிலைகளை வைத்து வழிபடுவோம். இந்நிலையில், நம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகப் பூஜை அறையில் கட்டாயமாக மகாலெட்சுமி, முருகன், விநாயகர், சரஸ்வதி, பெருமாள் இந்த ஐந்து தெய்வங்களின் படம் இருக்க வேண்டும்.
இதனுடன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கண்டிப்பாக வைக்க வேண்டும். சாளக்கிராமம், சோழி கோமதி சக்கரம் போன்ற லெஷ்மி கடாட்சம் பொருந்திய பொருட்களுக்கு இணையானது இந்த முகம் பார்க்கும் கண்ணாடி என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஐந்து தெய்வங்களின் படத்தையும் மற்றும் கண்ணாடியையும் பூஜை அறையில் வைத்து வழிபட ஐஸ்வர்யம் நிச்சயம் பெருகும்.
- Advertisement -