- Advertisement -
கோவை பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஆக.24) சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்லவிருந்தார். ஆனால், அவர் செல்லவிருந்த விமானத்தின் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மாற்று விமானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், அந்த விமானம் ஒன்றைரை மணி நேரம் தாமதமாக 10.07 மணிக்குக் கோவை புறப்பட்டது.
அதேசமயம், 2 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஆக. 24) கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில், தமிழக சட்டப்பேரவையின் மசோதாக்களைத் திருப்பி அனுப்பும் ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை லாலி ரோடு சந்திப்பு பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- Advertisement -