- Advertisement -
கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்ததால் அங்கு நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பல இயற்கை சீற்றங்கள் நடந்தது. இந்நிலையில், இந்த பேரிடர் பாதிப்புகளைச் சீரமைக்கத் தமிழ்நாடு அரசு சார்பாக ரூ .10 கோடி நிதியுதவி இமாச்சல அரசுக்கு வழங்கி உதவியது. இதுகுறித்து, இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் ”உங்கள் ஆதரவு, துன்பத்தின்போது ஒற்றுமை, இரக்கத்தின் உணர்வைக் காட்டுகிறது. பருவமழையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களைத் தொடர்ந்து வழங்குவதாக” சுக்விந்தர் உறுதி அளித்து தனது நன்றி தெரிவித்தார்
- Advertisement -