- Advertisement -
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், சென்னையில் இன்று (ஆக .24) அதிகாலை முதல் ஆதம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, மாம்பலம், பொன்னேரி, புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேசமயம், கடந்த 2 தினங்களாக சென்னையில் தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது என மக்கள் தெரிவித்தனர்
- Advertisement -