- Advertisement -
‘சந்திரயான்-3’ விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தை ஆராய நேற்று(ஆக. 23) நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவில் சாப்ட் லாண்டிங் செய்வதில் ரஷ்யா, அமெரிக்கா , சீனா போன்ற வரிசையில் 4வது நாடாக இணைந்தது இந்தியா. அதைப்போல், நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக இந்திய வரலாறு சாதனையைப் படைத்தது.
இந்நிலையில், இந்த வரலாறு சாதனை குறித்துப் பல தலைவர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள், “ சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Advertisement -