- Advertisement -
மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ரங்க் பகுதியில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் நேற்று (ஆக.23) எதிர்பாராத விதமாக திடீரென சரிந்ததில் அங்கு பணிபுரிந்து கொண்ட 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த 26 பேரும் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஆகவே, உயிரிழந்தவர்களின் உடல்களை மாநிலத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- Advertisement -