- Advertisement -
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறி அவரது சகோதரர் தனபால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பு பேட்டி அளித்தார். அதில், அவர் ” கோடநாடு பங்களாவிலிருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார். அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன” என்றார்.
மேலும், அவர் ” இறந்த கார் ஓட்டுநர் கனகராஜ் எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல. திட்டமிட்ட கொலை” எனப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஆகவே, இந்த கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்
- Advertisement -