- Advertisement -
கிரிக்கெட்டில் தனி ஒரு வீரரைக் கொண்டாடும் போக்கு தற்போது கஜமாகி வரும் சூழல் குறித்து சமீபத்தில் காம்பீர் அவர்கள் பேட்டியளித்துள்ளார். அதில், அவர் ” கடந்த 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோனியின் இன்னிங்சை மட்டுமே கொண்டாடுகிறோம், ஒரு இன்னிங்ஸ் மட்டுமே கோப்பையை வெல்ல போதுமானது அல்ல, இதில் அணியின் ஒட்டுமொத்த பங்களிப்பும் முக்கியமானது” என்றார்.
மேலும், அவர் ” அப்போது அந்த உலகக்கோப்பையில் யுவராஜ், ஜாகீர், சச்சின், ஹர்பஜன், ரெய்னா போன்றவர்களைக் கொண்டாடத் தவறிவிட்டோம், அவர்களின் பங்களிப்பை மறந்துவிட்டோம். சமூக வலைத்தளங்களில் அணியை விடத் தனி நபர்களைக் கொண்டாடும் போக்கு அதிகரித்துள்ளது, அப்படிச் செய்யும் போது,முக்கிய வீரர்களின் பங்களிப்பை நாம் கவனிப்பதில்லை” எனக் கூறி தனது காட்டத்தைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -