- Advertisement -
தமிழக அரசின் கீழ் பணிபுரியும் பணியாளர்களைத் தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்காக, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
மேலும், வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், இது சம்மந்தமான விவரங்களை விரிவாகத் தெரிந்துகொள்ள 9499966023 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -