- Advertisement -
பணக்கார கடவுளாகவும், பக்தருக்கு வேண்டிய வரங்களை அளிக்கக் கூடியவராகவும் இருப்பவர் திருப்பதி ஏழுமலையான். பொதுவாக எம்பெருமானுக்கு நாராயணா என்று அழைத்தால் மிகவும் இஷ்டம், ஆனால் ஏழுமலையானுக்கு நாராயணா, வெங்கடாசலபதி, சீனிவாசன் என்ற பெயர்கள் சொல்லி அழைத்தால் அதிகம் சந்தோசப்பட மாட்டார், ஆனால் அவருக்குப் பிடித்த “கோவிந்தா” என்ற பெயர் சொல்லிக் கூப்பிட்டால் கூப்பிட்ட குரலுக்குத் திரும்பிப் பார்ப்பார்.
இதற்குக் காரணம் அவர் பூலோகத்தில் அவதரித்த போது அவர் ஆயர்களோடு எளிமையாக ஆடு மேய்த்தார், ஏழுமலையானை ஆயர்கள் கோவிந்தா என அழைத்தனர், அதுவே அவருக்குப் பிடித்த பெயர், இதனால் தான் திருப்பதியில் கோவிந்தா என்ற நாமத்தைச் சொல்லி அன்போடு பக்தர்கள் அழைக்கின்றனர்.
- Advertisement -