- Advertisement -
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து மதுரை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆக.20ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் போராட்டம் நடந்தது. ஏனென்றால், அதே நாளில் மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (ஆக.24) தற்போது மதுரை மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- Advertisement -