- Advertisement -
நெல்லை மாவட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுவினர் சென்ற கார் நேற்று (ஆக.23) இரவு பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் ஒளிப்பதிவாளர் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அவருடன் பயணித்த நிருபர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், ஒளிப்பதிவாளர் சங்கர் மறைவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்து, அவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50,000 வழங்க உத்திரவிட்டார்
- Advertisement -