- Advertisement -
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை ICU அறைக்குள் காலில் ஷூ அணிந்து நுழைந்த பாஜக மேயரை,அங்குள்ள பணியாளர்கள் தடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மருத்துவமனை வளாகத்திற்கு புல்டோசர் வரவழைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைச் சீராக்கினர். ஆனாலும், இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, மேயர் வருகையின் போது பிரச்சனை எதுவும் இல்லை என மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது
- Advertisement -