- Advertisement -
கோவையில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்த கோயில் தற்போது சீரமைக்கப்பட்டு இன்று (ஆக.23) கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார் . இவர் முன்னிலையில் மேல தாளங்கள், வேத மந்திரங்கள் முழங்கக் கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டது. பின் பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
- Advertisement -