- Advertisement -
அதிமுக எழுச்சி மாநாடு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல மாவட்டங்களிருந்து தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இந்த மாநாட்டால் சில சிக்கல்களைச் சந்தித்துள்ளார்.
ஏனென்றால், அதே நாளில் திமுக நடத்திய உண்ணாவிரதத்தால் மக்கள் மத்தியில் அதிமுக மாநாடு பெரிய அளவில் சென்றடையவில்லை என நினைக்கின்றனர். மேலும், அதிகமான உணவு வீணானது குறித்த விமர்சனமும் அவரை கவலையடைய வைத்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -