- Advertisement -
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி இன்று (ஆகஸ்ட் 23) தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.இவருக்குப் பல திரையுலக பிரபலங்கள் , ரசிகர்கள் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நாளில் அவரது புதிய படத்திற்கு ‘மெகா 157’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய படத்தை இயக்குநர் வசிஸ்தா இயக்குகிறார். இந்த படம் ஃபேன்டசி பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- Advertisement -