- Advertisement -
கடந்த மாதம் பருவமழை காரணமாகத் தக்காளியின் வரத்து குறைந்து அதன் விலை உச்சம் பெற்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பல மாநிலங்களில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது தக்காளியின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
அதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்ற நிலையில் நேற்று(ஆக. 20) கிலோ ரூ.40க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று(ஆக. 21) ரூ.10 குறைந்து கிலோ ரூ.30க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- Advertisement -