- Advertisement -
இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் உருவாகியுள்ள து குஷி திரைப்படம். இந்நிலையில், இப்படத்திற்கு இவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். மேலும், இப்படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதனால், தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் கோவையில் நடைபெற்ற ‘குஷி’ படத்தைக் குறித்து செய்தியாளர் சந்திப்பில், “விஜய் சாரின் ‘குஷி’ படம் மிகப்பெரிய BlockBuster. நடிகர் விஜய்யின் ‘குஷி’ படத்தை ரசித்தது போன்று விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தையும் மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன். எனக்குப் பிடித்த நடிகரின் படத் தலைப்பை எனது படத்திற்கு வைத்ததில் மகிழ்ச்சி. 2 படத்தின் கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை” என ‘குஷி’ தலைப்பு குறித்துக் கேட்டபோது இவ்வாறு பதிலளித்துள்ளார்
- Advertisement -