- Advertisement -
தூத்துக்குடி இயங்குவதற்கு ஸ்டெர்லைட் ஆலைக்கான தடையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதன்படி, இந்த உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கின் இறுதி விசாரணை நாளை (ஆக .22) தொடங்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்தது.
அதில்,” கடந்த 22 ஆண்டாக இந்நிறுவனத்தால் அடிப்படை விதிகளைக்கூடப் பின்பற்றாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியுள்ளது. எனவே இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் திட்டவட்டமாகக் கூறியது.
- Advertisement -