- Advertisement -
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கலுக்கு நாள்தோறும் பலவேறு இடங்களிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும். ஏனென்றால், இந்த அருவியின் ரம்மியமான காட்சி மற்றும் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும் பரிசல் சவாரி ஆகும்.
இந்நிலையில், தற்போது கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், ஒகேனக்கலில் தொடர்ந்து 6வது நாளாக பரிசல் இயக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
- Advertisement -