- Advertisement -
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இந்நிலையில், இக்கோயிலில் நேற்று (ஆக 20) கும்பாபிஷேகம் நடந்த நிலையில், வளநாடு இஸ்லாமியர்கள் திரளாக வந்து கோயிலுக்குச் சீர்வரிசை கொண்டு வந்த நிகழ்வு அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதில், கோயிலுக்குத் தேங்காய், பழம், பீரோ , அரிசி, பருப்பு, மலர் மாலைகள், பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களைச் சீர்வரிசையாக வழங்கினர். இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்களுக்குக் கோயில் நிர்வாகம் பொன்னாடை போர்த்தி, பிரசாத லட்டுகளை வழங்கி மரியாதை செய்தது. இந்த மதநல்லிணக்க நிகழ்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
- Advertisement -