- Advertisement -
ஜெர்மனி அமைச்சர் வால்கர் விஸ்சிங் பெங்களூரூவில் நடைபெறும் டிஜிட்டல் அமைச்சர்கள் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், இவர் சந்தையில் ரூ.100க்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தி காய்கறி வாங்கியுள்ளார்.
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா யுபிஐ (UPI) வசதி டிஜிட்டல் பரிவர்த்தனையை நொடியில் சாத்தியமாக்கியுள்ளது. இது ஆச்சரியமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த காணொளிப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -