- Advertisement -
அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டி மழையின் குறுக்கீட்டால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில்,நேற்று (ஆக .20) அயர்லாந்து-இந்தியா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட 2வது டி20 போட்டி தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய அயர்லாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்த 2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றத்தின் மூலம் இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
- Advertisement -