- Advertisement -
பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி நேற்று அதிகாலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. அப்போது, இந்த பேருந்துக்கு எதிரே எரிபொருள் ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது பயங்கரமாக மோதியது. அதன் விளைவாகப் பேருந்தும் வேனும் தீப்பற்றி எரிந்தன.
இதையடுத்து, பேருந்திலிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு பேருந்திலிருந்து இறங்க முற்பட்டனர். ஆனால், அதில் ஒரு சிலரே பேருந்திலிருந்து இறங்க முடிந்தது. மீதம் உள்ளவர்கள் அனைவரும் இறங்க முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர். இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் உடல் கருகிப் பலியானார்கள். மேலும், 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வந்துள்ளது
- Advertisement -