- Advertisement -
மதுரையில் நேற்று (ஆக .20) நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட புளியோதரை சரியாக வேகாத காரணத்தாலும், சுவையில்லாத காரணத்தாலும் பலரும் சாப்பிடாமல் சென்றனர்.
இதனால், இன்று (ஆக .21) டன் கணக்கில் உணவுகள் கீழே வீணாகக் கொட்டப்பட்டுள்ளன. மேலும், சுமார் 5 லட்சம் பேருக்குச் சமைக்கப்பட்ட இந்த உணவுகள் அனைத்தும் மலைபோல் கொட்டி வீணாக்கப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த காணொளியை இணையத்தில் பதிவிட்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் கடும் அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் தற்போது இந்த வீணான உணவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- Advertisement -