- Advertisement -
அஸர்பைஜான் நாட்டில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பல நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், தற்போது நடைபெற்று வந்த காலிறுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள், சக வீரரான அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தினார் இதன்மூலம், உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதனால், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு, முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. மேலும், இனி வரவிற்கும் அரையிறுதி போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ காருணாவை சந்திக்க உள்ளார் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -