- Advertisement -
இந்தாண்டு உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் பல நாட்டு புகழ்பெற்ற வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதன்படி, இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையைத் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
மேலும், இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில், ” விஸ்வநாதன் ஆனந்துக்கு பின்னர் உலகக்கோப்பை செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்தியர். உங்களின் வரலாற்றுச் சாதனைக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
- Advertisement -