- Advertisement -
தமிழகத்தில் பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ .1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக இரண்டு கட்டங்களாகச் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த சிறப்பு முகாமில் விடுபட்ட நபர்கள் இன்று (ஆகஸ்ட் 18) முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் 36,000 சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்குச் சென்று விண்ணப்பப்படிவத்தைப் பெற்று முகாம்களுக்குச் சென்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -