- Advertisement -
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி அடுத்த ”தலைவர் 170” நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், சர்வானந்த், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் பலர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும், இப்படத்திற்கு ‘வேட்டையன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
- Advertisement -