- Advertisement -
சென்னையின் மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், தியாகராயர் நகர், தாம்பரம், வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட பல இடங்களில் இரவு முழுவதும் விடிய விடியக் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில், பகல் முழுவதும் வெயில் வாட்டிய நிலையில், திடீரென பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது
மேலும், தமிழ்நாட்டில் இன்று (ஆக.18) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
- Advertisement -