- Advertisement -
சென்னையில் உள்ள பனையூரில் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதியில் நடக்கவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி அப்போது அப்பகுதியில் பெய்த மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் செப்டம்பர் 10ல் நடைபெறும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மழை பெய்தாலும் இந்த மாதிரி இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யாமல் இருக்க, இசைக் கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஈசிஆர்-ல் ‘கலைஞர் கூட்டரங்கு’ உலகத்தரத்தில் விரைவில் அமையவுள்ளது என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கூறிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -