- Advertisement -
உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப்பில் HD புகைப்படங்களை எளிதாக அனுப்பும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
இந்நிலையில், இந்த அப்ளிகேஷன் அப்டேட் செய்யப்பட்ட பிறகு, வாட்ஸ்அப்பில் போட்டோ ஷேரிங் டேப்பில் HD பட்டனை க்ளிக் செய்து நிலையான அளவு மற்றும் HD அளவு விருப்பங்கள் இருக்கும். நீங்கள் HD தரத்தில் புகைப்படத்தை அனுப்ப விரும்பினால், HD விருப்பத்தை தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளது
- Advertisement -