- Advertisement -
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 2 நாள் சுற்றுப் பயணமாக ராமநாதபுரம் சென்று அங்குள்ள மீனவர் நல மாநாட்டில் பங்கேற்றுப் பேசி வருகிறார். அதில், அவர் ” தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தீராத பிரச்சனையாக உள்ளது. பாஜக ஆட்சியில் அடக்குமுறை அதிகமாகியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது என்றால், மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என அர்த்தம்” என்றார்.
மேலும், அவர் ” இந்த பாஜக ஆட்சியில் இந்தாண்டு மட்டும் 74 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஒவ்வொரு முறையும் நான் கடிதம் எழுதிய பிறகே ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கிறது. மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” என இவ்வாறு பேசினார்.
- Advertisement -