- Advertisement -
கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், இந்த விண்கலத்திலிருந்து குறைந்தளவு உள்ள நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் நேற்று (ஆக.17) பிரிந்தது.
இந்நிலையில், விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி லேண்டர் நிலை கண்டறியும் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், நேற்று லேண்டர் இமேஜர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
- Advertisement -