- Advertisement -
தற்போது நடித்துள்ள ‘லியோ’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 68’ படத்தில் நடிக்கிறார் என சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. ஒருவருக்கு நடிகர் ஜோதிகா ஜோடியாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
மேலும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு பான் இந்தியா நடிகை ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர். அதேசமயம், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
- Advertisement -