- Advertisement -
அயர்லாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இதில் இந்தியா -அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று (ஆக .18) இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டப்ளினில் தொடங்குகிறது.
மேலும், இந்திய டி20 அணிக்கு முதல் முறையாகப் பந்து வீச்சாளர் பும்ரா தலைமை ஏற்கிறார். அதேசமயம், இவர் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு விளையாடுவதால் அவரது கம்பேக்கை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -