- Advertisement -
கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான தூண் பாறை, குணா குகை, பைன் மரக் காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று (ஆக 17) விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் 15 நாட்களுக்கு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன
அதன்படி, இந்த சுற்றுலா வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ், மாசு சான்றிதழ் உள்ளிட்டவை கட்டாயம் எனவும், சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு கட்டணம் விதித்தும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், இந்த கட்டுப்பாடு உடனே அமலாகியதால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அடுத்த 15 நாட்களுக்குப் பின் இந்த கட்டுப்பாடு தொடரும் என சற்றுமுன் வனத்துறை அறிவித்துள்ளது
- Advertisement -