Saturday, September 30, 2023 5:38 pm

பாஜக, நடிகருமான எஸ்.வி.சேகரின் அவதூறு வழக்கு : உச்ச நீதிமன்றம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி சேகர் சார்பில் மனுத் தாக்கல் செய்தது குறித்து விசாரித்த நீதிமன்றம், ரத்து செய்ய மறுத்துத் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்

இந்நிலையில், இந்த பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும், இந்த வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குடும்ப பிரச்சனைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால், காணொளி மூலமாக ஆஜராக அனுமதிக்கலாம். இந்த வழக்கில் எப்படி அனுமதிப்பது? என நீதிபதிகள் கேள்வியெழுப்பி இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்