- Advertisement -
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ‘ஜெயிலர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் இயக்குநர் நெல்சன் அவர்கள், “ரிலீஸ்க்கு முன்னாடி ரஜினி சார்க்கு படத்த காட்டுனோம். நெனச்சத விட 10 மடங்கு நல்லா வந்திருக்கு, படம் நல்லா வரும்ன்னு தெரியும், ஆனா இந்தளவுக்கு எதிர்ப்பாக்கலன்னு சொன்னாரு” என்றார்.
மேலும், அவர் ” இங்கு நிறைய பேர் நம்மல சந்தேகமா பாக்கும்போது, படத்தோட முக்கிய புள்ளியா இருக்குற ஆளே, நம்மள நம்பி எல்லாத்தையும் வெளில வச்சிட்டு, நம்ம சொல்றதெல்லாம் கேட்டுப் பண்ணி, படத்த கொண்டு வந்ததே அவருதான்” என உருக்கமாகப் பேசினார்
- Advertisement -