- Advertisement -
கொடைக்கானலுக்குப் பல ஊருக்களிலிருந்து நாள்தோறும் பல்லாயிர சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் இருக்கும் நிலையில் , நேற்று முன்தினம் அனைத்து சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது
மேலும், இந்த ஓட்டுநர் உரிமம், ஆர்.சி, காப்பீட்டு சான்றிதழ், மாசு சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே இனி வனப்பகுதிக்குள் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படும் என்றும், பேரிஜம் பகுதிக்குச் செல்ல ஒருநாளைக்கு 50 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -