- Advertisement -
கடந்த மாதத்தில் வட மாநிலங்களில் பெய்த பருவமழை காரணமாகத் தக்காளியின் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சம் பெற்றது. ஆனால், தற்போது தக்காளியின் விளைச்சல் அதிகரித்து வருவதால், தக்காளியின் விலை குறைந்து வருகிறது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் தக்காளி நேற்று ரூ.50க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று (ஆக.16) ரூ.10 குறைந்து கிலோ ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது.
மேலும், இந்த பெங்களூர் தக்காளியின் விலை ரூ.60க்கு விற்பனையாகிறது. அது போல் பொடி தக்காளி கிலோ ரூ.20-ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தற்போது ஆங்காங்கே மட்டுமே மழை பெய்வதால் தக்காளியின் விலை குறைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
- Advertisement -