- Advertisement -
பொதுவாக அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பது காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் மரபு. அதுவும் ஆடி, புரட்டாசி, தை ஆகிய முக்கிய மாதங்களில் வரும் அமாவாசை காலங்களில் புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுத்துப் படையலிட்டு வழிபடுவது சிறப்பு.
அதன்படி, இன்று (ஆக.16) ஆடி மாதத்தில் வரும் கடைசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம், பாபநாசத்தில் தங்கள் முன்னோர்களுக்குக் காலை முதலே தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
- Advertisement -