- Advertisement -
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், 50 ஓவர் ஒரு நாள் போட்டியிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடப்பதால், அதில் விளையாடும்படி அவரிடம் இங்கிலாந்து அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில், இந்த வேண்டுகோளை ஏற்ற அவர் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவித்துள்ளனர் . அதில் ஜோஸ் பட்லர் (C), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, பேர்ஸ்டோ, சாம் கரன், லியம் லிவிங்ஸ்டோன், டேவின் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், ரீஸ் டாப்லி, டேவிட் வைலி, மார்க் வுட், க்றிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன் ஆகியோர் அணியில் உள்ளனர்
- Advertisement -