திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மாணவரை வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பலரும் தங்களது கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து அவர்கள் இந்த நாங்குநேரி கொடூரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அவர் ” பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கக் கூடாது. அடித்தட்டு மக்களின் மனதில் சாதிப் பாகுபாடுகளை விதைக்கக் கூடாது. சாதிகளை ஒழிக்கப் பிறந்த மன மருத்துவ நிலையங்களான கல்விக் கூடங்களிலேயே, சாதி தலைதூக்குவதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும். அதற்குப் பெருமையோ இழிவுவோ கொடுக்க வேண்டாம்” எனக் கூறி தனது கண்டனத்தைத் தெரிவித்தார்