- Advertisement -
மணிப்பூரில் இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் கலவரத்தால் பலர் தங்களது வீடு, உடைமைகளை இழந்திருந்தனர் . அவர்களை மீட்டு இதுவரை அம்மாநில அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், இப்படி நிவாரண முகாம்களில் தங்கி உள்ள 3,000 குடும்பங்களை வீடுகளில் குடியமர்த்த, தற்போது மணிப்பூர் மாநிலத்தின் 5 இடங்களில் ஆயத்த வீடுகள் தயாராகி வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், இங்கு ரெடிமேட் கட்டமைப்புகள், தகரக் கூரைகள் கொண்டு வீடுகள் உருவாக்கப்படுகின்றன என்றும், இது வருகின்ற ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் இந்த வீடுகளைக் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -